Tuesday, 10 October 2017

காளான் வளர்ப்பு Mushroom Seeds Sale Tamilnadu Mushroom | Kaalan Pannai | Valarpu | Cultivation Tamilnadu | Chennai Kalan Kaalan Valarpu சிப்பி பட்டன் பால் காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் விதை எங்கு கிடைக்கும் இடம் இலவச பயிற்சி புத்தகம் முறை Pdf

Mushroom | Kaalan Pannai | Valarpu | Cultivation Tamilnadu | Chennai Kalan Kaalan Valarpu சிப்பி பட்டன் பால் காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் விதை எங்கு கிடைக்கும் இடம் இலவச பயிற்சி புத்தகம் முறை Pdf 

காளான் வளர்ப்பு  9566354046
Star Mushroom Farms

திட்ட அறிக்கை :

( காளான் பண்ணை அமைக்க தேவையானது என்னென்ன ?)
காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம்

1)தேவையான இடம் 10*10 ரூம் அல்லது குடில்.
2)காளான் விதை .
3)பாலிதீன் பை 
4)வைகோல் [ நெல்லம் புள் - காய்ந்தது ]
5)தண்ணீர் குறைந்தே பட்சம் 100 லிட்டர் / நாளைக்கு.
6)வைக்கோலில் உள்ள கிருமிகளை அழிக்க கெமிக்கல் [ பார்மோலின் ,பெவிஸ்டின் ]

மேலும் விபரங்கக்ளுக்கு அழைக்கவும் 9566354046.


இந்த தொழில் ஒரு காய்கறி விவசாயம் போன்றது  , முதலீடு  என்பது  ரூ.1000 ரூபாயிலும் தொடங்கலாம் . முதலீடு என்பது நாம் எத்தனை  படுக்கை செய்கின்றோமோ அதை பொறுத்து  மாறுபடும் . ஒரு காளான் படுக்கை செய்ய தேவையான  செலவு ரூ.30 - ரூ.40. 

காளான் படுக்கை [வைகோலால் ஆனா காளான் வளரும் தலையணை போன்ற அமைப்பு ]
                                            





காளான் வளர்ப்பு pdf

காளான் படுக்கை  உற்பத்தி படம்     
    

முதலீடு :

காளான் வளர்ப்புக்கு குறைந்தபட்ச முதலீடு  ரூ.15,000 

செய்முறை:

வைகோலை பதப்படுத்த இரண்டு முறை உள்ளது :

முதலில் வைக்கோலில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்ய வேண்டும் . அதற்கு இரண்டு முறை உள்ளது .

(கிருமிகளை அழிக்கும் முறை 1)

1)கொதி நீரில்  அவித்தல் முறை

(கிருமிகளை அழிக்கும் முறை 2)

2)ரசாயனம் (கெமிக்கல் ) பயன்படுத்தி பதப்படுத்தல் முறை .

பால் காளான் வளர்ப்பு முறை 
சிப்பி காளான் வளர்ப்பு

1)கொதி நீரில்அவித்தல்முறை (இது சிறிய அளவில் காளான் உற்பத்திக்கு )

நன்கு காய்ந்த வைக்கோலைச் சிறு சிறு துண்டுகளாக வைக்கோல் (கட்டிங்) நறுக்கும் இயந்திரத்தின் மூலம் வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் சுமார் 8 மணி நேரம் ஊறவைத்து . இதனை ஒரு பத்து நிமிடம் நன்கு கொதிநீரில் வைத்து அவிக்க வேண்டும். இதன் மூலம் வைக்கோலில் உள்ள நோய் பரப்பும் கிருமிகள் அழிந்துவிடும் இது முதல் முறையாகும்.

2)ரசாயனம் (கெமிக்கல் ) பயன்படுத்தி பதப்படுத்தல் முறை .இது பெரிய  அளவில் காளான் உற்பத்திக்கு )

நன்கு காய்ந்த வைக்கோலைச் சிறு சிறு துண்டுகளாக வைக்கோல் (கட்டிங்) நறுக்கும் இயந்திரத்தின் மூலம் வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் சுமார் 8 மணி நேரம் ஊறவைத்து. அடுத்ததாக 100 லிட்டர் நீரும் 150 மில்லி லிட்டர் பார்மலினும், 3 கிராம் கார்பன்- டை- ஜம் பொடி  இம்மூன்றையும் கலந்த நீரில் வைக்கோலைச் சுமார் 8 மணி நேரம் ஊறவைக்கவேண்டும் .இதன் மூலம் வைக்கோலில் உள்ள நோய் பரப்பும் கிருமிகள் அழிந்துவிடும்,இது இரண்டாவது  முறையாகும்.

 மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு முறைகளில் ஏதோ  ஒரு  முறையை பயன்படுத்தி\, வைகோலில் உள்ள கிருமிகளை அழித்த  பிறகு .இதன் பின்னர் தண்ணீரை வடிகட்டி உலரவைக்கவும் . ஓரளவு ஈரப்பதம் (அதாவது 60%) கையில் பிடிக்கும் போது ஈர உணர்வு இருக்கும் படி வேண்டும். பின்பு 12-24 என்ற அளவுள்ள பாலித்தின் பையில் வைக்கோலை முதலில் 5 செ.மீ. அளவு இட்டு நிரப்ப வேண்டும். பின்பு காளான் விதையை 20 கிராம் எடுத்து நிரப்பப்பட்ட வைக்கோல் மேல் தூவ வேண்டும்.


இது போல் மாறி, மாறி 7 முதல் 8 அடுக்கு போட வேண்டும். பின்பு பக்கவாட்டில் 3 துளைகள் வீதம் நான்கு பக்கத்திலும் 12 துளைகள் போட வேண்டும். இதன் பின் காளான் வளர்ப்புக் கென்று தென்னை ஓலையால் பின்னப்பட்ட குடிலின் மையத்தில் கட்டித் தொங்க வைத்து தினமும் தண்ணீரைத் தரைப் பகுதியில் உள்ள மணலில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளித்து வந்த 10வது நாளில் காளான் விதைகள், வெள்ளை நிறமாக துளிர் விடுவதைக் காணலாம். பின்பு 27-ஆம் நாளில் காளான் மொட்டுக்கள் இதிலிருந்து தோன்றும். இதை 3 நாட்களில் அறுவடை செய்து விற்பனை செய்ய வேண்டும்.

ஒரு கிலோ காளான் உற்பத்தி மற்றும் விற்பனை விலை 

காளான் உற்பத்தி விலை


 ஒரு கிலோ காளான் உற்பத்திச் செலவு அதிகபட்சம் ரூ.30-40 ரூபாய் ஆகும்.

காளான் விற்பனை விலை

மொத்த விலை 
·          ஒரு கிலோ காளான் மொத்த விற்பனைக்கு ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யலாம்{லாபம் : ரூ .60}
           
       கடை விலை 
                      ஒரு கிலோ காளான்  கடை கடையாக நாம் விற்பனை செய்யும்போது ரூ.150 முதல் ரூ.175 வரை விற்பனை செய்யலாம்{லாபம் : ரூ .120}

      சில்லறை விற்பனை விலை 
       ஒரு கிலோ காளான்  நேரடியாக நாமே விற்பனை நிலையம் அமைத்து விற்பனை  செய்யும்போது ரூ.225 முதல் ரூ.250  வரை விற்பனை செய்யலாம்.    {லாபம் : ரூ .170}


இலவச காளான் வளர்ப்பு பயிற்சி 2017


சிப்பி காளான் வளர்ப்பு  வீடியோ 
|
|
|
V


காளான் வளர்ப்பு முறை pdf 





மொட்டு காளான் வளர்ப்பு வீடியோ 

|
|
|
V

பட்டன் காளான் வளர்ப்பு
இலவச காளான் வளர்ப்பு பயிற்சி 2018



 [1]காளான் விதைகள் சாம்பிள் 1 கிலோ ,
 [2] செய்முறை விளக்க CD/ புத்தகம் ,
 [3]  காளான் படுக்கை பாலிதீன் கவர்கள் 5 .
வீட்டில் இருந்ததே போஸ்ட்மேனிடம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் விலை ரூ.250. தேவைக்கு ,  உங்கள் முகவரியை 
 மெசேஜ் /SMS / What's App அனுப்பவும் ---> 9566354046 **பண்ணையில் நேரடி பயிற்சி அளிக்கின்றோம் ,       பண்ணை அமைத்துள்ள இடங்கள் ஈரோடு ,தர்மபுரி,விழுப்புரம்
 மற்றும் மேட்டூர்.






பண்ணை அமைந்துள்ள இடங்கள் 
1)தருமபுரி ,பாரதிபுரம்

2)மேட்டூர் ,நெரிஞ்சிப்பேட்டை 

3)ஈரோடு,பள்ளிபாளையம் .

நேரடியாக பண்ணையை பார்வையிடலாம். 

மேலே குறிப்பிட்ட பண்ணைகளில் எந்த பண்ணை உங்களுக்கு அருகில் இருக்கிறதோ அந்த பண்ணையில் நீங்கள் பயிற்சி எடுத்து கொள்ளலாம் .

பயிற்ச்சியில் நீங்கள் தெரிந்து கொள்ள இருப்பது

1)காளான் விதை தூவுவது எப்படி ?

2)தண்ணீர் எவ்வாறு தெளிப்பது ?

3)காளான் படுக்கையில் நோய் தொற்று ஏற்படுவதன் அறிகுறிகள் ?

4)நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பது எவ்வாறு?

5)ஏற்பட்ட  நோய் தொற்றை பறவாமல் தடுப்பது எவ்வாறு?

6)நோய் தொற்றை கட்டுப்படுத்த  என்னென்ன மருந்துகள் உபயோகபடுத்துவது ?
7)மருந்துகள் மற்றும் கெமிக்கல்கள் எவ்வெளவு அளவு , எந்த நேரத்தில் பயன்படுத்துவது ?

8)உற்பத்தி செய்த காளானை மதிப்பு கூட்டி (காளான் பப்ஸ் ,காளான் பிரியாணி ,காளான் சூப் ,காளான் சில்லி ,காளான் பகோடா,காளான் பிரை ) விற்பனை செய்வது எப்படி ?
9)உற்பத்தி செய்த காளானை விற்பனை செய்யும் வழிமுறைகள் என்னென்ன ?


லாபம் :


1)***ஒரு காளான் படுக்கை(12*24 இன்ச் ) செய்ய தேவையான செலவு ரூ .40 [1.பாலிதீன் பை ,2.வைகோல் 3.காளான் விதை 4.வேலையாட்கள் கூலி உட்பட ].
2)***அந்த காளான் பையில் கிடைக்கும் காளான் அளவு 1.5 கிலோ முதல் 2 கிலோ வரை { இந்த காளான் மூன்று முதல் நான்கு அறுவடையில் கிடைக்கும் }
[ 28 ஆம் நாள் முதல் அறுவடை , அடுத்த 2 அல்லது 3 நாட்கள் இடைவெளியில் அடுத்த அடுத்த அறுவடை ]
ஒரு காளான் பையில் நமக்கு கிடைக்கும் லாபம்:
ஓரு காளான் பை / படுக்கை செய்ய தேவையான செலவு ரூ.40
1) ரூ.200 - [ மொத்தவிலையில் விற்பனை செய்யும்போது ]
2) ரூ.300 - [கடை கடையாக விற்பனை
செய்யும்போது ]
3) ரூ.400 - [சில்லறை விற்பனை நிலையம் அமைத்து விற்பனை செய்யும்போது ]

உற்பத்தியாகும் காளானை மூன்று வழிகளில் விற்பனை செய்யலாம் .
****1)மொத்தவிலையில் விற்பனை .
****2)கடை கடையாக சென்று விற்பது .
****3)சில்லறை விற்பனை நிலையம் அமைப்பது .

***1)மொத்த விலையில் விற்பனை

1.1)மொத்த விலையில் விற்கும்போது நம்மிடம் உள்ள அதிகமான உற்பத்தியை (தினமும் 10/20 கிலோவிற்கு மேல் ) ,மொத்த வியாபாரி அல்லது வீடு வீடாக சென்று விற்பனை செய்யும் விற்பனையாளரிடம் விற்காலம் .

1.2)இந்த முறையில் நாம் விற்கும் 200 கிராம் பாக்கெட் மொத்த விற்பனை விலை ரூ.24.

1.3)நமக்கு கிடைக்கும் லாபம் 200 கிராம் பாக்கெட்டிற்கு ரூ.8.
1.4 )200 கிராம் பாக்கெட் உற்பத்தி செலவு ரூ.4.
1.5) மொத்தவிற்பனையில் லாபம் = ரூ 24-ரூ 4=ரூ.20.
1.6)மொத்த விலையில் நாம் விற்கும்போது நமக்கு ஒரு கிலோ காளானுக்கு நமக்கு கிடைக்கும் லாபம் ரூ.100.


****2)கடை கடையாக சென்று விற்பது

2.1)இந்த முறையில் காளானை விற்பதே சிறந்தது .இந்த முறையில் நீங்கள் முதலில் ஒவ்வொரு கடையாக அணுகி காளான் வேண்டுமா ?, காளான் வேண்டுமா ? என்று கேட்க தேவை இல்லை .


2.2)முதலில் நீங்கள் பிரிட்ஜ் (குளிர்சாதன பெட்டி ) உள்ள 50 முதல் 100 மளிகை கடைகள்,பாக்ரிகிகள் ,மெடிக்கல்களை தேர்வு செய்து , "இங்கு காளான் கிடைக்கும்" என்ற கலர் பிரிண்ட்(காளான் படத்துடன்) எடுத்து கடைக்கு வரும் மக்கள் பார்க்கும்படி 2 அல்லது 3 இடத்தில் ஒட்டவும் .

2.3) இவ்வாறு ஒட்டியவுடன் ஒரு கடைக்கு தினமும் 50 முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு ஒரு நபராவது காளான் பாக்கெட் கேட்பார்கள் . ஒரு கடைக்கு ஒரு நாளைக்கு 1 பக்கெட் என்றால் கூட 100 கடைக்கு ஒரு நாளைக்கும் 100 பக்கெட் சுலபமாக விற்பனை செய்யலாம். (கடைக்கு ஒரு பக்கெட்-ஐ ரூ.35 என்ற விலையில் தந்து கடைக்காரர் அந்த 200 கிராம் பாக்கெட்டை 45 /50 விலையில் விற்பார் )

2.3)இவ்வாறு பிரிண்ட் செய்து ஒட்டிய ஒரு வாரம் கழித்து , அந்த கடைகளை அணுகுங்கள் , உங்களுக்கு நிச்சயம் ஆர்டர் கிடைக்கும் .

2.4)இவ்வாறு காளானை நீங்களோ அல்லது ஒரு ஆள் போட்டோ விற்கும்போது , ஒரு பாக்கெட்க்கு நமக்கு கிடைக்கும் லாபம் , ரூ .30.

2.4.1)200 கிராம் பாக்கெட் உற்பத்தி செலவு ரூ.4 , விற்பது ரூ.35
லாபம் ஒரு பாக்கெட்டிற்கு = ரூ 35 - ரூ.4 = ரூ .31

2.5)இவ்வாறு நாம் கடை கடையாக விற்கும்போது நமக்கு ஒரு கிலோவிற்கு கிடைக்கும் லாபம் ரூ .150.

*****3)சில்லறை விற்பனை நிலையம் அமைப்பது .
3.1)உங்கள் ஊரில்/அருகில் உள்ள நகரத்தில் நீங்களாக ஒரு சிறு ரூமை வாடகைக்கு எடுத்து ஒரு பரிட்சு(Fridge) ஒரு RS.3500 சம்பளத்தில் ஒரு பெண் வேலையாள் , கடை மேலே ஒரு பெரிய பேனர் "இங்கு காளான் கிடைக்கும், ஆர்டரின் பேரில் விஷேசங்களுக்கு சப்ளை செய்யப்படும்" என்று காளான் படத்துடன் பெரிய பேனர் வைக்கவேண்டும் , ஒரு நாளைக்கு 30 முதல் 50 பக்கெட் வரை சுலபமாக விற்பனை செய்யலாம்.

3.2)கடை வாடகை உங்களுக்கு அதிகமாக இருந்தால் ஏற்கனவே உள்ள வேறு கடையில் பிரிட்ஜ் வைத்து அவர்களை விற்க சொல்லலாம் .
3.3)இவ்வாறு நாம் சில்லறை விலையில் காளானை விற்கும்போது நமக்கு ஒரு கிலோவிற்கு கிடைக்கும் லாபம் ரூ .200.

****மேலும் பல்வேறு விற்பனை உத்திகள் கீழ் உள்ளது :

[1]காளான் விதைகள் சாம்பிள் 1 கிலோ , [2] செய்முறை விளக்க CD/ புத்தகம் , [3] 5 காளான் படுக்கை பாலிதீன் கவர்கள் வீட்டில் இருந்ததே போஸ்ட்மேனிடம் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் விலை ரூ.200. தேவைக்கு , உங்கள் முகவரியை மெசேஜ் /SMS / what's app அனுப்பவும் ---> 9566354046. *** பண்ணையில் நேரடி பயிற்சி அளிக்கின்றோம் , பண்ணை அமைத்துள்ள இடங்கள் ஈரோடு ,தர்மபுரி,விழுப்புரம் மற்றும் மேட்டூர்.***

1)உங்கள் ஊரில்/அருகில் உள்ள நகரத்தில் வசிக்கும் சமையல் மாஸ்டர்களை அணுகவும் , ஒருமாதத்தில் நான்கு அல்லது ஐந்து விஷேசங்களில் வெசிடபள் /காய்கறி பிரியானிக்கு பதில் காளான் பிரியாணியை சமைக்க வலியுறுத்த சொல்லலாம் . சமையல் மாஸ்டர்களுக்கு ஒரு சிறு தொகையை கமிசன் னாக குடுக்கலாம் . இதன் மூலம் வாரத்திற்கு 20 முதல் 30 கிலோவை சுலபமாக விற்கலாம் .


2) விஷேச பத்திரிக்கை அச்சு அடிக்கும் இடத்தில் எளிதாக விஷேச வீட்டுகாரர்களின் மொபைல் எண்ணை ஒரு வாரம் முன்னதாகவே பெற்று அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு ,மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம் .

3)தற்போது மக்கள் பகிரியில் அதிகம் வெஜிடபள் பப்ஸ்-க்கும் பதில் காளான் பப்ஸ்-ஐ அதிகம் விரும்பி உண்ண தொடங்கி விட்டார்கள் , பாக்கிரிகளை அனுகி,மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம்.
4)உங்கள் பக்கத்துக்கு டவுனில் பஸ்டாண்டில் தள்ளு வண்டியில் காளான் சமைத்து விற்பார்கள், அங்கும் மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம்.
5)தற்போது பல இடங்களில் வெஜிடபள் சமோசா விற்பார்கள் , அங்கு காளான் சமோசாவை அறிமுகபடுத்தலாம் ,அங்கு மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம்.
6)தற்போது பல இடங்களில் கோழி/ஆட்டுகால் சூப் விற்பனை செய்கின்றனர் , அங்கு காளான் சூப் அறிமுகபடுத்தலாம், அங்கு மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம்.
7)உங்கள் ஊரில்/அருகில் உள்ள நகரத்தில் தினசரி மார்க்கெட் கண்டிப்பாக இருக்கும் அங்கு ஒரு ஆள் போட்டு சில்லரை விலையில் (Rs.45/Rs.50 )அல்லது கடைகாரரிடம் மொத்த விலையில்(Rs.35 / Rs.40) விற்பனை செய்யலாம்.
8)ஏற்கனவே உள்ள சைவ /அசைவ ஹோட்டல்களில் காளான் பிரியாணியை அறிமுக படுத்தலாம் .

மேலும் விபரங்கக்ளுக்கு அழைக்கவும் 9566354046.

kaalan காளான் வளர்ப்பு தொழில் 


Mushroom | Kaalan Pannai | Valarpu | Cultivation Tamilnadu | Chennai Kalan Kaalan Valarpu சிப்பி பட்டன் பால் காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் விதை எங்கு கிடைக்கும் இடம் இலவச பயிற்சி புத்தகம் முறை Pdf 

காளான் வளர்ப்பு புத்தகம்
காளான் வளர்ப்பு pdf

பட்டன் காளான் வளர்ப்பு

பால் காளான் வளர்ப்பு முறை 

சிப்பி காளான் வளர்ப்பு

இலவச காளான் வளர்ப்பு பயிற்சி 2017

காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் 


காளான் வளர்ப்பு முறை pdf 

இலவச காளான் வளர்ப்பு பயிற்சி 2018

Looking For Branches in 

Ariyalur  Nagapattinam   Perambalur  Pudukkottai  Thanjavur  Tiruchirappalli  Tiruvarur  Dharmapuri    Coimbatore  Karur  Erode  Krishnagiri  Namakkal  The Nilgiris  Salem  Tiruppur  South  Dindigul Kanyakumari  Madurai  Ramanathapuram  Sivaganga  Theni  Thoothukudi  Tirunelveli  Virudhunagar North  Chennai  Cuddalore  Kanchipuram  Tiruvallur  Tiruvannamalai  Vellore  Viluppuram

6 comments:

  1. மிகவும் எளிமையான மற்றும் உபயோகமான தகவல்

    ReplyDelete
  2. sir/madam, How much kgs can harvest from your sample seed?

    ReplyDelete
  3. காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம்

    ReplyDelete
  4. This article was written by a real thinking writer. I agree many of the with the solid points made by the writer. I’ll be back. white widow seeds

    ReplyDelete
  5. இது பற்றிய மேலும்விவரங்கள் அறிய .. யாரை எங்கு தொடர்பு கொள்ளவேண்டும்

    நன்றி

    ReplyDelete